கோவிலில் பிரார்த்தனை செய்ய சென்ற பாடசாலை மாணவர்கள்..அடுத்து நேர்ந்த துயரம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் சாலை விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பாடசாலை மாணவர்கள்
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து, மந்திராலய சமஸ்கிருத பாடசாலை மாணவர்கள் கோவிலுக்கு வாகனம் ஒன்றில் கிளம்பியுள்ளனர். சிவா (24) என்ற சாரதி வாகனத்தை ஓட்டியுள்ளார்.
அவர்கள் சென்ற வாகனம், அரகினாமாரா முகாம் அருகே சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
இதில் ஆர்யவந்தன் (18), சுசீந்திரா (22) மற்றும் அபிலாஷ் (20) ஆகிய மூன்று மாணவர்களும், சாரதியும் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
உடல்கள் மீட்பு
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில், ஹம்பி என்ற பகுதிக்கு நரஹரி கோவிலில் பிரார்த்தனை செய்ய மாணவர்கள் பயணித்தது தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |