கரூரில் நடந்த துயரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் ஒப்படைப்பு
கரூரில் விஜய் பரப்புரையில் உயிரிழந்தவர்களின் அனைத்து உடல்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடல்கள் ஒப்படைப்பு
நேற்று கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்து இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று 39 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இரவே உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை தொடங்கிய நிலையில், உயிரிழந்த 40 பேரின் உடல்களும் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட பல கட்சி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |