கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு
கரூர் பரப்புரையில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் நிவாரணம்
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய 39 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |