கரூரில் விஜய் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலி: கரூர் த.வெ.க செயலாளர் மீது வழக்கு
கரூர் த.வெ.க செயலாளர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் நேற்று (செப் 27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் மீது கரூர் டவுன் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலுசாமிபுரத்தில் நடந்த பிரச்சார நிகழ்வின் போது விதிமுறைகளை மீறியதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் இதுவரை மதியழகன் பெயரை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
83 பேர் காயமடைந்த இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |