காதலியை கொன்று விட்டேன்! போலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்
கேரள மாநிலம் கண்ணங்காடு அருகே காதலியை கொலை செய்து விட்டு, அருகிலிருந்த காவல் நிலையத்தில் சரணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒப்பனை கலைஞர் கொலை
கேரள மாநிலம் கண்ணங்காடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், ஒப்பனை கலைஞரான தேவிகா(34) என்ற பெண்ணை கொலை செய்து விட்டு, அவரது காதலன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
@google
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவிலுள்ள தங்கும் விடுதியில், சரியாக மதியம் 1.30 மணிக்கு, சதீஸ் என்பவர் தேவிகாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் விடுதி அறை கதவை சாத்தி விட்டு, நேராக அருகிலிருந்த கண்ணங்காடு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
@asiant
இது பற்றி கண்ணங்காடு பொலிஸ் அதிகாரி பால கிருஷ்ணன் நாயர் கூறியதாவது ’ மாலை 5 மணிக்கு காவல்நிலையத்திற்கு வந்த அவர் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்’ என்றார்.
பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கையில் தேவிகா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனை தொடர்ந்து குற்றவாளி விசாரிக்கப்பட்ட போது , சதீஸ் அந்த விடுதியில் சில மாதங்களாக தங்கி வந்துள்ளார். அப்போது கண்ணங்காட்டில் நடைபெற்ற மாநில அளவிளான ஒப்பனை கலைஞர்கள் அமைப்பினர் நடத்திய கூட்டத்திற்கு செல்லும் போது சதீஸை சந்தித்துள்ளார்.
அதன் பின்னர் இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் தேவிகாவிற்கு திருமணமாக இரண்டு குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் சதீஸிக்கு கல்யாணமாகி குழந்தை உள்ளது.
@gettyimages
இதனிடையே ஒப்பனை கலைஞரான தேவிகாவும் , சதீஸும் திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளனர். சதீஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தேவிகாவை வற்புறுத்தியுள்ளார்.
தேவிகா அதனை தொடர்ந்து மறுக்க, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் சதீஸ் தேவிகாவை கொலை செய்தார் என பொலிஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.