என் மகனின் படிப்பு பாதிக்கப்படுவதால் விலக்கு கேட்டு இருக்கிறேன்: நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி காவல்நிலையத்திற்கு சென்று வர விலக்கு கேட்டிருப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தினமும் கையெழுத்திட வேண்டும்
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரிக்கு, எழும்பூர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது.
ஆனால், தனது பிணை நிபந்தனைகளை தளர்வு செய்யுமாறு கஸ்தூரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனுதாக்கல் செய்ததன் காரணம்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி மனுதாக்கல் செய்ததன் காரணம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "நான் ஐதராபாத்தில்தான் 4 ஆண்டுகளாக குடியிருக்கிறேன். அங்கிருந்து படப்பிடிப்பிற்கு போய்க்கொண்டிருக்கிறேன். இப்போது படப்பிடிப்பு எல்லாம் தடைப்பட்டிருக்கிறது. என் மகனுடைய பள்ளிக்கூடம் அங்கேதான் இருக்கு.
அங்கே சென்றும் 2 வாரங்கள் ஆனதால் கொஞ்சம் தளர்வு கேட்டு விண்ணப்பித்துள்ளேன். திங்களன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. படிப்பு, வேலை எல்லாம் இருப்பதனால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |