முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கு முன் இப்படி யாராவது செய்திருந்தால்? விமர்சித்த நடிகை கஸ்தூரி
அம்மா உணவகங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த விதத்தை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
உணவகங்களில் ஆய்வு
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த தமிழக அரசு ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மு.க.ஸ்டாலின் இதற்கான உத்தரவினை பிறப்பித்ததுடன், அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகத்தில் உணவு ஆய்வு செய்ததை நடிகை கஸ்தூரி விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கேள்வி
கஸ்தூரி தனது எக்ஸ் தள பதிவில், ''அடடா!! இது அருவருப்பானது. இதற்கு விளக்கம் உண்டா? ஸ்பூன் அல்லது காகிதக் கோப்பை கிடைக்கவில்லையா? குறைந்தபட்சம் அவர் தனது உள்ளங்கையில் உணவை வைத்து உண்டிருக்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கு முன், சமையல்காரர்கள் யாரேனும் இதுபோன்ற உணவை டெஸ்ட் செய்திருந்தால் அதன் பின்விளைவுகள் என்னவாயிருக்கும்?'' என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Ugh!! This is gross. Is there an explanation for this?
— Kasturi (@KasthuriShankar) July 19, 2024
No spoon or paper cup available?
At least he cud have dropped the morsel onto his palm..
If any cooks had 'tested' the food like this before CM Stalin inspection, what would have been the consequence? pic.twitter.com/4vcWFF3bnj
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |