வெள்ளை மாளிகையின் புதிய பத்திரிகை செயலாளராக கேட்டி ஜக்காரியா நியமனம்: டிரம்ப் அதிரடி
Katie Zacharia appointed as WH New Press Secretary: வெள்ளை மாளிகையின் புதிய பத்திரிகை செயலாளரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் புதிய பத்திரிகை செயலாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கான புதிய பத்திரிகை செயலாளராக பிரபல கன்சர்வேட்டிவ் விமர்சகர் மற்றும் ஊடக ஆளுமையாளருமான கேட்டி ஜக்காரியாவை(Katie Zacharia) நியமித்துள்ளார்.
AFP செய்தி நிறுவனத்திடம் பேசிய வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர், புதிய பத்திரிகை செயலாளராக கேட்டி ஜக்காரியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஊடக உறவுகளை கையாள்வதற்கும், வெள்ளை மாளிகையின் தினசரி செய்தி தொடர்புகளை நிர்வகிப்பதிலும் கேட்டி ஜக்காரியா பணியாற்றுவார் என தெரியவந்துள்ளது.
இந்த பணியில் நன்கு அறியப்பட்ட கேட்டி ஜக்காரியா இந்த பதவியில் அமர்த்தப்பட்டதன் மூலம் டிரம்பின் ஊடக குழுவிற்கு இது வலுவான சேர்க்கையாக பார்க்கப்படுகிறது.
