கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்து: 6 பக்தர்கள், விமானி பலி
கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் ஒரு பைலட் உட்பட மொத்தம் ஏழு பேர் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் அருகே பக்தர்கள் சென்ற ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Garud Chatti அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது, இதுவரை 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கேதார்நாத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் ஒரு பைலட் உட்பட மொத்தம் ஏழு பேர் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோசமான வானிலை மற்றும் மோசமான பார்வைத்திறன் விபத்துக்கு காரணம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் தொடர்பில் விவரங்கள் கண்டறியப்பட்டு வருகிறது அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வேதனை தெரிவித்ததோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
விபத்து நடத்த இடத்தில் இருந்து பெரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
shocking! Six people died in a helicopter crash at Phata, kedarnathpic.twitter.com/n9ziyoZAm7
— Divya Gandotra Tandon (@divya_gandotra) October 18, 2022
A Helicopter crash near Garud Cheti, three kilometre from Kedarnath. Two pilots and four civilians killed. Bodies have been retrieved.#Uttarakhand #Kedarnath pic.twitter.com/TyX6bzaiJt
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) October 18, 2022