உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் ஆப்பிரிக்க நாடொன்று, இனி எந்த நாட்டவரையும் Visa இல்லாமல் அனுமதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜனவரி 2024 முதல் கென்யாவுக்குச் செல்ல உலகம் முழுவதிலுமிருந்து வரும் பார்வையாளர்களுக்கு விசா தேவையில்லை.
அதற்கு பதிலாக மின்னணு பயண அங்கீகாரம் (electronic travel authorization) இருந்தால் போதும், கென்யாவிற்கு செல்லலாம்.
கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ (William Ruto) டிசம்பர் 12 அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Kenya சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி Nairobiயில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி ரூடோ, 'electronic travel authorization கடினமான விசா செயல்முறையை முடிவுக்கு கொண்டு வரும்' என்றார்.
கென்யா அதன் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்காக பிரபலமானது. wildlife safari சென்று சிலிர்ப்பான அனுபவத்தைப் பெற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். கென்யாவின் பொருளாதாரம் சுற்றுலாவை பெரிதும் சார்ந்துள்ளது. இப்போது, விசா தேவையில்லை என அறிவித்த பிறகு, அதிகமான பயணிகள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு Visa Free Entryயை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Kenya to become visa-free from January 2024, Visa Free Entry Nation, Kenya, electronic travel authorization, William Ruto