வேறு ஊரில் உள்ள ஹொட்டலில் தங்கிய கேரள தம்பதி தற்கொலை! வெளிவரும் தகவல்
கேரளாவை சேர்ந்த தம்பதி வேறு மாநிலத்தின் ஹொட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
கேரள தம்பதி
கன்னூரை சேர்ந்த தம்பதி ரவீந்திரன் (57) மற்றும் சுதா (51). இவர்களுக்கு ரெம்யா, ரேஷ்மா என இரு மகள்கள் உள்ளனர். ரவீந்திரன் ஆடை வணிகம் செய்து வந்தார்.
இந்த நிலையில் அவரும், சுதாவும் கடந்த திங்கட்கிழமையன்று கர்நாடக மாநிலத்தின் மங்களூருக்கு வந்து அங்குள்ள ஹொட்டலில் தங்கினர். ஹொட்டலுக்கு வந்த நாளில் இருந்து அவர்கள் அறையில் இருந்து வெளியே வராததோடு, ஊழியர்களையும் அழைக்காமல் இருந்தனர்.
Representational
இரண்டு சடலங்கள்
இதனால் சந்தேகமடைந்த நிர்வாகம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தது. சம்பவ இடத்திற்கு நேற்று வந்த பொலிசார் அறை கதவை திறந்த போது ரவீந்திரனும், சுதாவும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
இதையடுத்து இரண்டு பேரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டது.
இது குறித்து அவர்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு விசாரணையும் நடைபெற்று வருகிறது.