துபாய் Duty Free லொட்டரியில் 2 இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
துபாய் Duty Free லொட்டரியில் 2 இந்தியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
துபாயில் நடைபெற்ற Dubai Duty Free Millennium Millionaire லொட்டரியில் டிராவில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தலா 1 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ.9.5 கோடி) வென்றுள்ளனர்.

வெற்றியாளர்கள்
கபீர் பூவத்திங்கல் (48 வயது), அபுதாபியில் விமான சேவை துறையில் பணிபுரிகிறார். கடந்த 22 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். 12 ஆண்டுகளாக தொடர்ந்து லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்த அவர், இறுதியில் Series 547-இல் வெற்றி பெற்றார்.
மொஹம்மது ஷிபில் தைய்யில் (30 வயது), ஷார்ஜா Airport Free Zone-இல் விற்பனை நிர்வாகியாக பணிபுரிகிறார். 2025 அக்டோபரில் துபாய்க்கு குடிபெயர்ந்த அவர், தனது இரண்டாவது டிக்கெட்டிலேயே Series 548-இல் வெற்றி பெற்றார்.
இது தனது வாழ்க்கையை மாற்றும் அனுபவம் என கபீர் கூறியுள்ளார்.
ஷிபில், “திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது, இப்போது கோடீஸ்வரன் ஆனது நம்ப முடியாத அதிர்ச்சி” என உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
1999-இல் தொடங்கிய Dubai Duty Free லொட்டரியில் இதுவரை 279 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், Finest Surprise Raffle-ல் ஓமனைச் சேர்ந்த கௌஷல் வேத் எனும் மற்றொரு இந்தியர் (மஸ்கட்) Mercedes-Benz S500 காரை வென்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |