வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை! ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் விற்கப்பட்ட கேரளப்பெண்... அதிரவைக்கும் பின்னணி
கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திடம் பணத்துக்கு விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒன்று அதிக சம்பளத்துக்கு ஆசை காட்டி பெண்களை அரபு தேசங்களுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது.
டெய்லரிங், நர்சிங் என பல வேலைகளுக்கு அழைத்துச் சென்று, ஐ.எஸ் அமைப்பினருக்கு விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணையில் கண்ணூரைச் சேர்ந்த மஜீத் மற்றும் பத்தணம்திட்டாவைச் சேர்ந்த அஜுமோன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது. மஜீத் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.
அஜுமோன் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட கேரள பெண் அளித்த புகாரில், குழந்தைகளை பராமரிக்கும் பணிக்கு மாதம் 60,000 சம்பளம், விமான டிக்கெட் இலவசம், சொகுசான வாழ்க்கை என ஏமாற்றி இளம் பெண்களை குறிவைத்து வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
முதலில் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து குவைத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குவைத்தில் மாமா என அழைக்கப்படும் பெண் ஒருவர் எங்களை அழைத்துச் சென்றார்.
மஜீத்துக்கு மூன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டதாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார்.
மேலும் கொல்லத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும், திருக்காக்கரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாகியான மஜீத்தை கைது செய்தால் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு குறித்து மேலும் பல புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.