நரமாமிசம் சாப்பிட்டிருக்கலாம்., 56 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்: கேரளா நரபலி சம்பவத்தில் புதிய தகவல்கள்
நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லினும் பத்மாவும் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரன்டு பெண்களையும் கொன்று நரமாமிசம் உட்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
கேரளாவில் செல்வந்தர்களாக மாறுவதாக இரண்டு பெண்களை நரபலி கொடுத்ததாக கூறப்படும் தமபதி, பாதிக்கப்பட்டவர்களின் (நரமாமிசம்) சதையை கூட சாப்பிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. கொல்லப்பட்ட ரோஸ்லினும் பத்மாவும் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களது கைகள் பின்னால் கட்டப்பட்டு மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு இரத்தம் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆபாச படத்தில் நடித்தால் பல லட்சம் பணம்! 2 பெண்கள் நரபலி தரப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்
பகவல் சிங்-மனைவி லைலா மற்றும் முகவர் முகமது ஷஃபி
அதில் ஒரு உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூன்று குழிகளில் இருந்து உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த கொலைகள் நிதி பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக கொடுக்கப்பட்ட நரபலிலியாக கருதப்பட்டாலும், கொலையாளிகள் பாலியல் வக்கிரம் கொண்டவர்களாகவும் கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட தம்பதிகள், பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் விசாரணையின் போது, "அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் இறைச்சியை உட்கொண்டதாக" பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டு பெண்கள் நரபலி! துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி... பகீர் வேண்டுதல்
ரோஸ்லின், பத்மா
ஆனால் நரமாமிசம் உட்கொண்டதை நிரூபிக்க ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கொச்சி நகர பொலிஸ் கமிஷனர் நாகராஜு சகிலம்கூறியுள்ளார். தடயவியல் பரிசோதனை மற்றும் ஆதாரங்கள் சேகரிப்பு இன்றும் தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் கணவன் பகவல் சிங்-மனைவி லைலா மற்றும் முகவர் முகமது ஷஃபி