15 ஆண்டுகளுக்கு பிறகு..யூத முறைப்படி கேரள பெண்ணை மணந்த அமெரிக்க விஞ்ஞானி
இந்திய மாநிலம் கேரளாவில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு யூத முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
கேரளாவில் யூத முறைப்படி நடந்த திருமணம்
கேரளா, கொச்சியைச் சேர்ந்தவர் ரேச்சல். இவர் முன்னாள் குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பினோய் மலகாயின் மகளாவார். ரேச்சலுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்டு ரோவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களது இரு குடும்பமும் மணமக்களுக்கு யூத முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தார்கள். ஆனால், கேரளாவில் யூத ஆலங்களில் திருமணம் நடத்தப்படுவதில்லை.
இந்நிலையில், கேரள, கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற ஒரு கூடாரம் வடிவமைக்கப்பட்டது. இத்திருமணத்தை நடத்தி வைப்பதற்காக இஸ்ரேலிலிருந்து மதகுரு ரபி வந்தார். இவர் முன்னிலையில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கெண்டனர்.
இதனையடுத்து, கெதுபா யூத முறைப்படி, கண்ணாடியை உடைத்து திருமணத் தம்பதிகள் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கேரளாவில் யூத முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | Kerala: Kochi witnessed its first Jewish wedding in 15 years on 21st May, when Rachel and Richard tied the knot at a resort. The marriage was officiated by a Rabbi from Israel.
— ANI (@ANI) May 22, 2023
Rachel is the daughter of former Crime Branch Superintendent Binoy Malakhai while Richard is… pic.twitter.com/UNEroILNOb
Kerala: Kochi witnesses its first Jewish wedding in 15 years pic.twitter.com/MVVu4pi1k1
— Take One (@takeonedigital) May 22, 2023