கேரளாவில் காதலர்கள் செய்த திடுக்கிடும் செயல்! துண்டு துண்டாக வெட்டி கொன்ற கொடூரம்
கேரளாவில் தங்கும் விடுதி முதலாளியை கொடூரமாக கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விடுதி முதலாளி கொலை
கேரளாவின் திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58) என்பவர், கோழிக்கோடு இரங்கி பாலத்தில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த மே 18ஆம் திகதி இவர் காணாமல் போனதாக, அவரது மகனால் காவல் துறையினர் புகார் அளித்ததை அடுத்து, பொலிஸார் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.
@ommanoramma
பின்னர் கேரளாவின் அட்டப்பாடியில் இறந்த சித்திக்கின் உடல் பாகங்கள் பெரிய பையில் அட்டப்பாடி அருகே காட்டுப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சித்திக் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியிருப்பதாகவும், அவரது மார்பு பகுதி மற்றும் தலையில் பலமாக தாக்கியிருப்பதால் உயிரிழந்திருப்பதாகவும், பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
சிக்கிய காதலர்கள்
இதனை தொடர்ந்து பொலிஸார் சித்திக்கின் ஹோட்டல் சிசிடிவியை பரிசோதிக்கையில், சிபிலி(22) என்ற நபரும் அவரது காதலியான ஃபர்ஹானா என்பவரும் விடுதிக்குள் வந்திருப்பது பதிவாகியுள்ளது.
@ommanoramma
இந்நிலையில் இறந்த சித்திக்கின் மகன், தனது அப்பாவின் ஏடிஎம் கார்ட்டில், ஒரு லட்சத்திற்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனிடையே பொலிஸார் அவர்களை தீவிரமாக தேடியுள்ளார்.
பின்னர் சென்னையில் தலைமறைவாக இருந்த அந்த காதலர்களை, தமிழ்நாடு காவல்துறை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
கூடுதல் விசாரணை
விசாரணையில் சிபிலி என்பவர் அந்த விடுதியில் பணிபுரிந்ததாகவும், அவர் முதலாளிக்கு தெரியாமல் பணத்தை திருடியதற்காக, அவரை சித்திக் பணியை விட்டு நீக்கியதாக தெரிய வந்துள்ளது.
@ommanoramma
இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது காதலியான ஃபர்ஹானா உடன் சேர்ந்து, திட்டமிட்டு சித்திக்கை கொலை செய்து பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, அட்டப்பாடி காட்டுப் பகுதியில் வீசியதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த வழக்கில் கூடுதலாக சிலர் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அதனை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.