கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு! பல குடும்பங்கள் மாயம்.,விரைந்த ராணுவம்
கேரள மாநிலத்தில் நிலச்சரிவின் கோரத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
47 ஆக உயர்வு
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படுத்திய பேரழிவில் 19 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் பல குடும்பங்கள் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
குறைந்தது 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்ட பகுதிகளாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பினராயி விஜயன்
இந்த நிலையில் அனைத்து அரசு நிறுவனங்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ள நிலையில் ராணுவமும் விரைந்துள்ளது.
இதற்கிடையில் பல குடும்பங்கள் பல்வேறு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு தீயணைப்பு மற்றும் NDRF குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் குழு வயநாடு செல்லும் வழியில் உள்ளதாகவும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் (MI17, ALH) சூலூர் விமான தளத்தில் இருந்து மீட்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பப்படுவாதக தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரண பணி
பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில், அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் தனது எண்ணங்கள் இருக்கும் என்றும், காயமடைந்தவர்களுக்கு பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், முதல்வர் பினராயி விஜயனிடம் பேசி அனைத்து உதவிகளையும் செய்ய உறுதி அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும், முதல்வரிடம் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்ததாகவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Distressed by the landslides in parts of Wayanad. My thoughts are with all those who have lost their loved ones and prayers with those injured.
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
Rescue ops are currently underway to assist all those affected. Spoke to Kerala CM Shri @pinarayivijayan and also assured all possible…
I am deeply anguished by the massive landslides near Meppadi in Wayanad. My heartfelt condolences go out to the bereaved families who have lost their loved ones. I hope those still trapped are brought to safety soon.
— Rahul Gandhi (@RahulGandhi) July 30, 2024
I have spoken to the Kerala Chief Minister and the Wayanad…