இஸ்ரேலில் நல்ல சம்பளத்தில் வேலை., நம்பி உயிரிழந்த இந்தியர்
இஸ்ரேல்-ஜோர்டான் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர் ஜோர்டான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
47 வயதான ஆனி தோமஸ் கேப்ரியல் பெரேரா (Ani Thomas Gabriel Perera), திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு வேலை ஏமாற்று கும்பலின் பிடியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலை வாய்ப்பு என்ற பெயரில் மோசடி
பெரேரா மற்றும் அவரது மைத்துனர் எடிசன் சார்லஸ், ஒரு ஏஜெண்டின் வாக்குறுதியில் ஜோர்டானுக்குச் சென்றனர்.
ஏஜெண்ட் அவர்களுக்கு இந்திய பணமதிப்பில் மாதம் ரூ.3,50,000 சம்பளதிற்கு வேலை கிடைக்கும் என்று கூறி ரூ.2,10,000 முன்பணம் வாங்கியுள்ளார்.
ஜோர்டான் சென்ற பிறகு, மேலும் ரூ.52,289 ($600) பெற்றுக்கொண்டு, இஸ்ரேல் செல்ல முயற்சிக்க கூறினார்.
ஏமாற்றப்பட்டிருப்பதை உணராத இருவரும் பிப்ரவரி 10 அன்று எல்லையை கடக்க முயன்றபோது ஜோர்டான் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்டனர்.
இச்சம்பவத்தில், பெரேரா உயிரிழந்தார், சார்லஸ் உயிரிழப்பதிலிருந்து தப்பி இந்தியா திரும்பினார்.
குடும்பத்தினரின் வேதனை
அவரது குடும்பம் மார்ச் 1-ஆம் திகதி இந்திய தூதரகத்திடமிருந்து ஒரு மின்னஞ்சல் பெற்றது.
ஆனால் உறவினரின் மகன் லண்டனில் இருந்துதான் இந்த தகவலை குடும்பத்தினருக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
அவரது மனைவி, கடைசியாக பேசிய போது, "எனக்காக பிரார்த்தனை செய்" என கூறியதாக நினைவுகூர்கிறார்.
உடலை திருப்பி கொண்டு வர கோரிக்கை
காங்கிரஸ் தலைவர் சசி தரூர், வெளிநாட்டு அலுவல்களுக்குத் தன்னுடைய மனுவை அனுப்பியுள்ளார்.
"இது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம். அவரது உடல் திருவனந்தபுரத்திற்கு விரைவாக கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பிற்காக செல்லும் இந்தியர்கள் போலி ஏஜெண்டுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |