துபாய் லொட்டரியில் ஜாக்பாட் அடித்த கேரள நபர்! எட்டு ஆண்டுகளுக்கு பின் விழுந்த அதிர்ஷ்டம்
துபாயில் இந்தியர்கள் இணைந்து வாங்கிய லொட்டரி டிக்கெட்டிற்கு ஒரு மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.
துபாய் டியூட்டி ஃப்ரீ குலுக்கல்
இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்தவர் பிரசாத் சிவதாசன். 45 வயதாகும் இவர் 20 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார்.
பர் துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் பிரசாத், கடந்த சில ஆண்டுகளாக தன் நண்பர்களுடன் இணைந்து துபாய் டியூட்டி ஃப்ரீ குலுக்கலில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் பிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து 10 பேராக, மாறி மாறி தங்களின் பெயர்களில் டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்.
1 மில்லியன் டொலர்கள்
கடந்த பிப்ரவரி மாதம் வாங்கிய இந்த லொட்டரிக்கு ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. அதன் பரிசுத்தொகை 1 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் 8 கோடியே 70 லட்சம்) ஆகும்.
பரிசு வென்றதன் மூலம் மில்லினியம் மில்லியனர் குலுக்கலில் வென்ற 246வது இந்தியர் எனும் பெருமையை பிரசாத் சிவதாசன் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "துபாய் டியூட்டி ஃப்ரீ நிறுவனத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |