இரண்டாவது திருமணம் முடிந்த 8 நாளில் அதிர்ச்சி சம்பவம்! மூன்று பிள்ளைகளுடன் கணவன் மனைவி மரணம்
இந்திய மாநிலம் கேரளாவில் 2வது திருமணம் செய்துகொண்ட தம்பதி, தங்கள் மூன்று பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரண்டாவது திருமணம்
கேரளாவின் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா (38). இவர் சமீபத்தில் ஷஜி என்ற 42 வயது நபரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் தனது மூன்று பிள்ளைகளான சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) ஆகியோருடன் ஸ்ரீஜா வசித்து வந்தார். இந்த நிலையில் ஷஜியின் வீட்டில் பலர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
சடலமாக மீட்பு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஷஜி, ஸ்ரீஜா மற்றும் அவர்களின் 3 பிள்ளைகள் என ஐந்து பெரும் தூக்கில் சடலாக தொங்கியிருந்தனர்.
அவர்களின் உடல்களை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீஜாவும் அவரது கணவரும் குடும்ப பிரச்சனை காரணமாக மூன்று பிள்ளைகளையும் தூக்கிலிட்டு கொன்றுள்ளனர்.
அதன் பின்னர் அவர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பெரும் மரணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.