கேரள பாடசாலை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணையில் வெளியான பின்னணி
கேரளாவில் பாடசாலை மாணவி தற்கொலை விவகாரத்தில், பொலிஸ் விசாரணையில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளது.
கேரளாவில் மாணவி தற்கொலை
கேரளாவில் பாலராமப்புரத்துள்ள பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், பெரும் அதிர்வலையை கிளப்பியது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 17 வயதான அஸ்மியா மோல், பாலராமபுரத்தில் உள்ள இஸ்லாமிய பாடசாலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
@getty images
பின்னர் அங்கு சென்ற பொலிஸார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர். இந்நிலையில் அவரது தற்கொலையில் மர்மம் நிறைந்திருப்பதாக, அவரது பெற்றோர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் மாணவிக்கு பாடசாலை ஆசிரியர்கள் தொல்லை கொடுத்ததாகவும், சகமாணவிகள் மூலம் புகார் கிடைத்திருந்தது.
விசாரணையில் வெளியான மர்மம்
இந்நிலையில் மாணவியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடலில் எந்த வித காயங்களும் இல்லை எனவும் இது தற்கொலை தான் எனவும் உறுதி செய்துள்ளனர்.
பின்னர் தீவிர விசாரணை நடத்திய பொலிஸார் மாணவி அஸ்மியாவும், போந்துரா பகுதியை சேர்ந்த ஹசீம் கானும் காதலித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.
@ommanoramma
இதனை தொடர்ந்து ஹசீம், அஸ்மியாவை நிறைய தொல்லை செய்திருக்கிறார். இதற்கு அவர் இணங்க மறுக்க அதனால் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹசீம் தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டே இருந்திருக்கிறார்.
இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவர் ஹசீமை பொலிஸார் கைது செய்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
@asiant
இந்நிலையில் பாடசாலையை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும், மாணவியை உடல் ரீதியாக தாக்கவில்லை எனவும் உறுதியளித்துள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் மாணவியை திட்டியிருக்கிறார்கள், என சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.