லிங்க்கை தொட்டால் வேலை தருகிறேன்! கேரள பெண்ணிடம் 7.74 லட்சம் ரூபாய் மோசடி
ஆன்லைன் மூலம் தனக்கு வேலை கிடைத்துவிட்டதாக நம்பி கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 7.74 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார்.
மோசடியில் சிக்கிய பெண்
நம்மில் நிறைய பேர் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதை விட சிறப்பான ஒன்றை தேடி அலைந்து கொண்டே இருக்கிறோம்.
இத்தகைய ஆசையுடன் இருப்பவர்களை குறி வைத்து ஆன்லைனில் உள்ள மோசடி கும்பல்கள் தங்களது கைவரிசையை அவ்வப்போது நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் கேரளாவின் பரவூரில் உள்ள குன்னுகரா பகுதியை சேர்ந்த மந்திர ஷர்மா என்ற பெண் ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக நம்பி 7.74 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார்.
கடந்த ஜூன் 11ம் திகதி மந்திர சர்மாவின் போனுக்கு போலி நிறுவனம் ஒன்றில் இருந்து மெசேஜ் ஒன்று வந்துள்ளது, அதில் உங்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது, பல்வேறு இணைய சேவைகள் குறித்து மதிப்பீட்டு செய்து அது குறித்த விமர்சனங்களை வழங்க வேண்டும் இதுவே உங்களுக்கான தினசரி பணி என தெரிவித்துள்ளனர்.
மந்திர ஷர்மாவும் நல்ல நிறுவனம் என்று நம்பி ஆர்வத்தில் அவர்கள் கூறிய பணியை செய்து முடித்து வந்துள்ளார், அப்போது திடீரென தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் பெறலாம் என கூறியுள்ளனர்.
அதை நம்பி மந்திர ஷர்மாவும் தன்னிடம் இருந்த 7.91 ரூபாயை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார், முதலில் அவருக்கு 17,000 ரூபாய் கிடைத்த நிலையில், அடுத்த சில நாட்களுக்கு பிறகு சம்பந்தப்பட்ட இணையதளம் வேலை செய்யாமல் முடங்கியுள்ளது.
அப்போது தான் மந்திர சர்மாவுக்கு தான் ஏமாற்றப் பட்டுளோம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
எர்ணாகுளம் சைபர் காவல் நிலையத்தில் இந்த ஆண்டு மட்டும் இது போன்ற 15 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சூழ்ச்சிகளில் சிக்காமல் இருப்பது எப்படி
இது போன்ற மோசடி வேலை வாய்ப்புகளில் சிக்காமல் இருப்பதற்கு லிங்க்டின், நாக்ரி, இண்டீட் போன்ற நம்பகமான வேலைவாய்ப்பு தளங்களில் இருந்து வரும் வாய்ப்புகளுக்கு மட்டும் விண்ணப்பிப்பது.
வேலை தருகிறோம் என்ற பெயரில் அனுப்படும் எந்த லிங்கையும் கிளிக் செய்வதற்கு முன்பு உஷாராக இருப்பது.
வெறும் மொபைல் எண்ணை மட்டும் அடையாளமாக வைத்துக் கொண்டு வேலை தருவதாக கூறுபவரிடம், அவரது பெயர் மற்றும் நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை தயங்காமல் கேட்பது.
நிறுவனத்தின் பெயரை கூகுளில் தேடி பார்த்தாலே சம்பந்தப்பட்ட நிறுவனம் உண்மையானதா, அங்கு வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்பது போன்ற விவரங்கள் தெரிந்துவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |