KFC Chicken: மொறு மொறு KFC சிக்கன்.., இனி வீட்டிலேயே செய்யலாம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு தான் இந்த KFC சிக்கன்.
இந்த KFC சிக்கனை கடைகளில் வாங்கி உண்டால் குறைந்தது 500 ரூபாய் செலவழிக்கவேண்டும். இந்த சிக்கனை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
வீட்டிலேயே செய்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும், ஆசை தீரவும் சாப்பிட முடியும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஊறவைக்க தேவையானவை
- எலும்பில்லாத சிக்கன்
- தயிர்- ½ கப்
- பால்- 1 கப்
- முட்டை- 1
- இஞ்சி பேஸ்ட்- 1 ஸ்பூன்
- பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எலுமிச்சை- ½
பொறிக்க தேவையானவை
- மைதா மா- 1 கப்
- சோள மா- ½ கப்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- ½ ஸ்பூன்
- சீரக தூள்- ½ ஸ்பூன்
- பூண்டு பொடி- ½ ஸ்பூன்
- வெங்காய பொடி-½ ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், பால், முட்டை, இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும்.
பின் கலந்து வைத்த கலவையில் எழுப்பில்லாத சிக்கன் துண்டுகளை சேர்த்து 2 மணி பிரிட்ஜில் வைத்த ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடித்து ஒரு தட்டில் மைதா மா, சோள மா, மிளகாய் தூள், மிளகு தூள், மல்லி தூள், சீரக தூள், பூண்டு பொடி, வெங்காய பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர் ஊறவைத்த சிக்கனை கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான மொறுமொறு KFC சிக்கன் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |