கனடாவை களங்கப்படுத்தும் காலிஸ்தானிகள்., இந்திய வம்சாவளி எம்.பி. கண்டனம்
காலிஸ்தான் தீவிரவாதிகளால் கனடா களங்கப்படுகிறது என்று இந்திய வம்சாவளி எம்பி சந்திரா ஆர்யா (Chandra Arya) கூறியுள்ளார்.
காலிஸ்தானிகள் அனைவரும் கனடாவின் உள்ளூர் சட்டங்கள் வழங்கிய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்துவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், எட்மண்டனில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்தில், சந்திரா ஆர்யா மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களை இந்தியாவுக்கு திரும்பச் செல்லுமாறு Sikhs for Justice அமைப்பின் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளார்.
அதனைத் தனது X பக்கத்தில் வெளியிட்ட சந்திரா ஆர்யா, காலிஸ்தானி பிரிவினைவாதிகளின் நடவடிக்கையால் கடும் கோபமடைந்தார்.
அவர் தனது பதிவில், 'நாங்கள் இந்துக்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கனடா வந்து குடியேறியுள்ளோம். தெற்காசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலிருந்தும், ஆப்பிரிக்காவின் பல நாடுகள், கரீபியன் மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
கனடா எங்கள் தாயகம். கனடாவின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் நாம் முக்கிய பங்கு வகித்துள்ளோம். எங்கள் சேவைகள் இங்கு தொடரும். செழுமையான இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மூலம் கனடாவின் பன்முக கலாச்சார மரபுகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளோம்.
இந்த செயல்பாட்டில், காலிஸ்தானி ஆதரவாளர்கள் கனடா வழங்கிய உரிமைகளை தவறாக பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்களால்தான் கனடா களங்கப்படுகிறது." என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், எட்மண்டனில் உள்ள 'பிஏபிஎஸ்' சுவாமி நாராயண் கோவில் சில மர்ம நபர்களால் நாசப்படுத்தப்பட்டது. கோவிலின் சுவர்களில் வண்ணங்கள் தூவப்பட்டன. வெறுக்கத்தக்க கருத்துகளை எழுதப்பட்டன.
செவ்வாய்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்திற்கு சந்திரா ஆர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Chandra Arya, Canadian MP Chandra Arya, Indian Origin Candian MP