பிரதமர் மோடி வருகையையொட்டி அவுஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள இந்து கோவிலை காலிஸ்தானிகள் நாசப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இந்து கோவில் மீது தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் மற்றொரு இந்து கோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கி நாசமாக்கினர். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள சுவாமி நாராயண் கோவில் உள்ளது. இக்கோவில் காலிஸ்தானி ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிலின் சுவரில் காலிஸ்தானி கொடியையும் ஏற்றினர். சுவாமிநாராயண் கோவிலின் வெளிப்புறச் சுவரில் இன்று அதிகாலை "மோடியை பயங்கரவாதியாக அறிவிக்கவும்" என்று எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
@ShekharPujari2
இந்நிலையில், வரும் மே 23ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவுஸ்திரேலியாவிற்கு வருகை தர உள்ளார்.
மோடி வருகையொட்டி அவுஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தானி ஆதரவாளர்கள் இத்தாக்குதல் நடத்தியுள்ளனர். 6வது முறையாக அவுஸ்திரேலியாவில் இந்து கோவில் தாக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 16ம் தேதி அன்று விக்டோரியாவின் கேரம் டவுன்ஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சிவ விஷ்ணு கோயில் சேதப்படுத்தப்பட்டன. கடந்த மார்ச் 4ம் தேதி பிரிஸ்பேனில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோயில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டன.
இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா பலமுறை கண்டனம் தெரிவித்து, அவுஸ்திரேலிய அரசிடம் பிரச்சினையை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#khalistani haters have again vandalised #Hindu temple in Sydney this Morning in display of blatant #hindupobhia Australian government has again failed to protect its non white religious and ethnic minority. #Khalistani #Hinduphobic #hindupobhia pic.twitter.com/WKReKlyq6g
— Indian Troll lover (@trollove1) May 5, 2023