கைதாணை அல்ல... மரண தண்டனை வேண்டும்: நெதன்யாகு குறித்து ஈரான் தலைவர் கோபம்
இஸ்ரேலிய தலைவர்கள் இருவர் மீதும் மரண தண்டனை விதிக்க வேண்டும், கைதாணை அல்ல என தெரிவித்துள்ளார் ஈரானின் உச்சத்தலைவர் அலி கமேனி.
கைதாணை தொடர்பில் அலி கமேனி
காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேலுடன் சண்டையிடும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா படைகளுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்த நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைதாணை தொடர்பில் அலி கமேனி கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஹமாஸ் தலைவர் இப்ராஹிம் அல்-மஸ்ரி ஆகியோருக்கு எதிராக வியாழக்கிழமை கைதாணை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகளில் விவாதப் பொருளாகியுள்ளது. பிரித்தானியாவும் கனடாவும் நெதன்யாகு கைதுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ரோம் ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இஸ்ரேலில் கடும் கொந்தளிப்பு
இந்த நிலையில், கருத்து தெரிவித்துள்ள அலி கமேனி, அவர்களுக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போதாது, மரண தண்டனை கட்டயம் அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு மீதும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீதும் கைதாணை பிறப்பிக்க போதுமான காரணங்கள் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், கொலை, துன்புறுத்தல் மற்றும் போரின் ஆயுதமாக பட்டினியை உருவாக்கியது உள்ளிட்ட செயல்களுக்கு அவர்கள் மீது கைதாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இந்த முடிவு இஸ்ரேலில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வெட்கக்கேடான செயல் மற்றும் அபத்தமானது என தெரிவித்துள்ளனர். ஆனால், வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இது உதவும் என காஸா மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |