ஈராக்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட கமேனியின் இறுதி ஊர்வலம்
மறைந்த ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலம் ஆறு நாட்கள் நீடித்து வருகிறது.
இன்று (ஜூலை 8), அவரது உடல் ஈராக் நாட்டின் புனித நகரமான நஜஃபில் கொண்டு வரப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உடலைத் தொடர்ந்து ஊர்வலமாகச் சென்றனர்.
மக்கள் கமேனியின் பெரிய படங்களை ஏந்திக்கொண்டு, "அமெரிக்கா அழியட்டும்”, “இஸ்ரேல் அழியட்டும்” என முழக்கமிட்டனர். ஈரான் மற்றும் ஈராக் தேசியக் கொடிகள், ஈரான் ஆதரவு ஈராக் இராணுவ படைகள் கொடிகளுடன் பறந்தன.

நஜாஃப் நகரம், ஷியா இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமான இடமாகும். ஏனெனில் அங்கு முகமது நபியின் உறவினரும் மருமகனுமான இமாம் அலி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கமேனியின் உடல் நஜாஃப் சர்வதேச விமான நிலையத்தில் வந்தபோது, ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி, பல உயர்பதவி அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் வரவேற்றனர். மேலும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் மற்றும் புரட்சிகர காவல் படை தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இறுதி ஊர்வலம் கர்பலா நகரத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அவரது உடல் மீண்டும் ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |