உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்

Iran Mojtaba Khamenei
By Arbin Aug 30, 2026 04:35 PM GMT
Report

Mojtaba Khamenei's Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.

ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அப்பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தீர்வு என்பது

மத்திய கிழக்குப்போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் | Khamenei Letter To Muslim Countries

பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியபோது அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த மொஜ்தபா கமேனி, பதவியேற்றதிலிருந்து இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை; மேலும் அதிகாரிகள் அவரைப் பற்றிய எந்தவொரு காணொளியையோ அல்லது ஒலிப்பதிவையோ வெளியிடவில்லை.

இந்த நிலையில், வெளியாகியுள்ள கடிதத்தில், இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது நல்வழியில் ஒற்றுமை, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷியா முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையிலேயே அவரது கடிதமும் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு... ஒருவர் மரணம், பலர் காயம்

சுவிட்சர்லாந்தில் இரவு நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு... ஒருவர் மரணம், பலர் காயம்

எந்தவொரு பதவியில் இருப்பவரானாலும் சரி, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது முஸ்லிம் சமூகத்தில் மோதலை உருவாக்கும் செயலில் ஈடுபடுபவர் எவரும் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கே சேவை செய்தவராவார் எனவும் கமேனி குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, பிராந்திய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுமாறும் கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.

போரின்போது, ​​சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்தது. அதன்பிறகு அந்த நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன.

டொலர் பயன்பாடு

முக்கிய அரசு கொள்கைகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட கமேனி, ஈரானிய அதிகாரிகளும் குடிமக்களும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, பல மாதங்களாக நீடித்த அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதித்த பல ஆண்டுகால முடக்கும் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ஈரானியப் பொருளாதாரத்தை படிப்படியாக டொலர் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கவும், வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவும் அவர் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US