பழிதீர்க்கப்படும்... தந்தையின் கொலை தொடர்பில் சூளுரைத்த மொஜ்தபா கமேனி
படுகொலை செய்யப்பட்ட தனது தந்தையின் மரணத்திற்குப் பழிதீர்க்கத் தங்கள் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக ஈரானின் உயர் தலைவர் சூளுரைத்துள்ளார்.
புதிய கட்டத்திற்கு
ஈரானின் அரசு செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ஈரான் போரை நாடவில்லை, ஆனால் தனது உரிமைகளை விட்டுக்கொடுக்காது; மேலும் அனைத்து எதிர் முன்னணிகளையும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாகவே கருதுகிறது என மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிரிகளால் ஆதரிக்கப்படும் ஊடகங்களுடன் தொடர்புகொள்வதை ஈரானியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை ஈரான் ஒரு புதிய கட்டத்திற்கு நகர்த்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகத்தை ஒரு புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மறைந்த உயர் தலைவர் மற்றும் உயிர் நீத்த தியாகிகளுக்குப் பழிவாங்குவதில் ஈரான் உறுதியாக உள்ளது என்றும் மொஜ்தபா கமேனி பதிவு செய்துள்ளார்.
இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்துவதாலும், ஈரான் ஹார்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்துவதாலும், அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த முயற்சி தளர்ந்து வரும் நிலையில், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நிச்சயமற்று நீடிக்கின்றன.

பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில்
போரில் தாங்களே வென்றதாக ஈரானும் அமெரிக்காவும் உரிமை கோரி வரும் நிலையில், நிரந்தர ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இஸ்லாமாபாத்தில் விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கென துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் அமெரிக்க தூதுக்குழுவிற்கு தலைமை தாங்க உள்ளார். இதனிடையே, இஸ்ரேலியத் தாக்குதல்களால் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், போர் தொடங்கியதிலிருந்து லெபனானில் புதன்கிழமையே மிகவும் மோசமான நாளாக அமைந்தது.

ஹிஸ்புல்லா படைகள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் கடுமையானப் பதிலடியைத் தூண்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |