நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் குறிவைக்கப்பட்ட ஷ்ரிங்கலா கட்டிவாதா... யாரிவர்?
நேபாளத்தில் சமூக ஊடகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம், ஆட்சி மாற்றத்தையே அந்த நாட்டில் கொண்டுவந்துள்ளது.
ஆடம்பர வாழ்க்கை
Gen-Z போராட்டம் முன்னெடுக்கப்பட நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் ஆடம்பரமான வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ஊழல், வேலையின்மை போன்ற நெருக்கடியில் நாடு தத்தளிக்கயில் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஆடம்பர வாழ்க்கையை முன்னெடுக்க, இதனாலையே பல அரசியல்வாதிகளின் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஆனால், சமூகத்தில் சில வெற்றிபெற்றவர்களும் Gen-Z போராட்டக்காரர்களால் குறிவைக்கப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர் ஷ்ரிங்கலா கட்டிவாதா. நேபாளத்தின் மொடலும், முன்பு உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டவருமான இவர் தனது ஆடம்பர வாழ்க்கையால் குறிவைக்கப்பட்டார்.
2018 உலக அழகி போட்டியில் நேபாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதல் 12 இடங்களுக்குள் வந்த முன்னாள் அழகி இவர். சமூக ஊடகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் ஆதவராளர்களைக் கொண்ட இவர், சர்வதேச பயணங்கள், ஆடம்பர பிராண்டுகள், கவர்ச்சியான இடங்களில் போட்டோஷூட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையின் படங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.
பொதுப் பணத்தைக் கொள்ளையடித்து
2018ல், ஷ்ரிங்கலா மிஸ் நேபாளமாக முடிசூட்டப்பட்டார் மற்றும் உலக அழகி போட்டியில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அங்கு அவர் முதல் 12 இடங்களைப் பிடித்தார்.
இந்த நிலையில், இவரது புகைப்படங்களும் Gen-Z போராட்டக்காரர்களின் கவனத்தை ஈர்க்க, தாக்குதலுக்கு இலக்கானார். நாட்டின் வசதி படைத்த மக்கள், குறிப்பாக அரசியல்வாதிகளின் பிள்ளைகள், பொதுப் பணத்தைக் கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள், அதே நேரத்தில் பொது மக்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளால் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும், ஷ்ரிங்கலா, நேபாளத்தின் முன்னாள் சுகாதார அமைச்சர் பிரோத் கதிவாடா மற்றும் பாக்மதி மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் முனு சிக்டெல் ஆகியோரின் மகள் ஆவார். இதுவும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட காரணமாக அமைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |