ரஷ்யாவாக மாறும் உக்ரைனின் பிரபல நகரம்! கவர்னர் அறிவிப்பு
உக்ரைனின் கெர்சன் நகரம் ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாறுப்போகிறது என்று ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கவர்னர் Volodymyr Saldo அறிவித்துள்ளார்.
பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, சமீபத்திய நாட்களாக போரில் பின்னடைவை சந்தித்துள்ளது.
எனினும், மரியுபோல், கெர்சன் நகரங்களை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்யா.
இந்நிலையில், கெர்சன் ரஷ்யாவின் ஒரு பகுதியாகப் போகிறது என ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கவர்னர் Volodymyr Saldo அறிவித்துள்ளார்.
கெர்சனில் ரஷ்ய ஆதரவு படையினருடன் நடந்த முதல் சந்திப்பில் கவர்னர் Volodymyr Saldo இவ்வாறு அறிவித்தார்.
கணவரை கொன்றுவிட்டு.. உக்ரேனிய விதவை பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய வீரர்!
கெர்சன் விரைவில் ரஷ்யன் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என கூறினார். நாங்கள் ரஷ்யன் கூட்டமைப்பை எங்கள் சொந்த நாடாக பார்க்கிறோம்.
Volodymyr Saldo
கெர்சனுக்கான புதிய பட்ஜெட் ரூபிள்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என Volodymyr Saldo தெரிவித்துள்ளார்.