சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை வரவேற்ற குஷ்பு
பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் சொத்து குவிப்பு வழக்கில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு நடிகை குஷ்பு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பொன்முடிக்கு சிறை தண்டனை விதிப்பு
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பொன்முடி மீது தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தரப்பினரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பு பதிவு
இந்நிலையில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஊழல் என்பது எந்தவகையிலும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்று. அது வேரோடு அழிக்கப்பட வேண்டும். ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக அறிவாலயம் உள்ளது.
தற்போது ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய நேரம் இது. அமைச்சர் பொன்முடி மீதான நீதிமன்ற தீர்ப்பை நான் மனதார வரவேற்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறையின் மீதான நம்பிக்கை மேலும் வலுக்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |