வன தேவதைக்கு உயிர்ப்பலி... குகைக்குள் பெண் குழந்தை: பதறவைக்கும் சம்பவம்
தாய்லாந்தில் மாயமானதாக கூறப்பட்ட ஒருவயது குழந்தை மூன்று நாட்களுக்கு பிறகு காட்டுக்குள் குகை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தப்பட்ட அந்த குழந்தையானது வன தேவதைக்கு உரிப்பலி அளிக்க கொண்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. தாய்லாந்தின் Chiang Mai கிராமத்தில் ஞாயிறன்று மதியத்திற்கு மேல் குடியிருப்புக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை Pornsiri Wongsilarung திடீரென்று மாயமானதாக கூறப்பட்டது.
குழந்தை தொடர்பில் பெற்றோர் பொலிசாருக்கு தெரிவிக்க, சுமார் 200 பொலிசார், மீட்பு குழுவினர், தன்னார்வலர்கள் என ஒரு பெரிய குழு ஒன்று, குடியிருப்புகள் மற்றும் காட்டுப்பகுதியில் தேடத் தொடங்கியது.
மட்டுமின்றி, இந்த தேடுதல் நடவடிக்கையில் மோப்ப நாய்களும் ட்ரோன் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் மாயமான குழந்தையின் தந்தைக்கு நண்பரான 44 வயது Siew திங்களன்று கைது செய்யப்பட்ட நிலையில், குழந்தையை கடத்தியது தாம் தான் என்றும்,
வன தேவதைக்கு உயிர்ப்பலி அளிக்க, 2 மைல்கள் தொலைவில் உள்ள குகை ஒன்றில் குழந்தையை பதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த குகைப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மற்றும் பொலிசார், செப்டம்பர் 8ம் திகதி புதன்கிழமை குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். அரைகுறை ஆடையில் இருந்த குழந்தை, பூச்சிகளால் உடம்பெங்கும் கடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள்ளது.
தொடர்ந்து அந்த குழந்தையானது மருத்துவ சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
வன தேவதை தம்மிடம் உயிர்ப்பலி கேட்டதாகவும், அதற்காகவே நண்பனின் குழந்தையை தாம் கடத்திச் சென்றதாக அந்த நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் தாம் குழந்தைக்கு எந்த தீங்கும் விளைவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.