ஈஸ்டர் அன்று தேவாலயங்களில் தாக்குதல் நடத்த திட்டம்! பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை
பாரம்பரிய ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பாரம்பரிய கிறிஸ்துவர்கள் ஏப்ரல் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஸ்டர் தினத்தை கொண்டாடவுள்ளனர்.
முக்கிய பாரம்பரிய கிறிஸ்தவ சமூகங்கள் ரஷ்யா, உக்ரைன், தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரம்பரிய ஈஸ்டர் அன்று உக்ரேனிய அதிகாரிகள் பயங்கரமான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் மேற்கத்திய அரசாங்கங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைப்பு ஆகியவற்றிடம் இந்த தாக்குதலை தடுக்குமாறு ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளது என ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ஜெனரல் Mikhail Mizintsev தெரிவித்துள்ளார்.
விபத்தில் தமிழக இளம் வீரர் மரணம்! கண்ணீர் வணக்கம் செலுத்திய சீமான்
ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, ரஷ்ய படைகள் மீது போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்த உக்ரைன் திட்டமிள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது.