சொந்த மாமாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய கிம் ஜாங்! 2 ஆண்டுகள் கழித்து அத்தை குறித்து தெரிந்த தகவல்
கணவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு 9 ஆண்டுகள் ஆன நிலையில் கிம் ஜாங்கின் அத்தை இரண்டாண்டுகளுக்கு பின்னர் பொது வெளியில் முதல் முறையாக தோன்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது மனைவி மற்றும் அத்தையுடன் கடந்த செவ்வாய்கிழமை சந்திரப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதன்மூலம் கிம் ஜாங்கின் அத்தையான கிம் கியாங் ஹூய் இரண்டாண்டுகள் கழித்து பொது நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார்.
கிம் கியாங், கிம் ஜாங்கின் தந்தையான முன்னாள் வடகொரிய தலைவர் கிம் ஜாங் 2வின் சகோதரி ஆவார்.
கிம் கியாங்கின் கணவர் ஜாங் சாங்குக்கு கடந்த ஜாங் சாங் 2013ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஏனெனில் அரசைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
ஜாங் சாங் முன்னர் கிம் ஜாங்கின் வழிகாட்டியாக கருதப்பட்டார், ஆனால் தேசதுரோக குற்றச்சாட்டில் சிக்கிய அவருக்கு அதிலிருந்து வீழ்ச்சி தொடங்கியது, இதன் பின்னரே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.