ரஷ்யாவின் தடுக்க முடியாத ஏவுகணை: கிம் ஜாங் உன்னின் பார்வைக்கு வைக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள்
முழுமையான அழிவு ஆயுதம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் அழைக்கும் தடுக்க முடியாத ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தன்னுடைய ரஷ்ய சுற்றுப்பயணத்தின் பார்வையிட்டார்.
வட கொரிய ஜனாதிபதியின் ரஷ்ய பயணம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 19 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ரஷ்ய பயணம் உலக நாடுகள் மத்தியில், அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.
அப்படி இருக்கையில் கடந்த புதன்கிழமை ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விண்வெளி நிலையத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கிட்டத்தட்ட 4 மணி நேரம் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
ஆனால் இந்த சந்திப்பில் எந்தவொரு ஆயுத ஒப்பந்தங்களும் கையெழுத்து செய்யப்படவில்லை என்று ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஏவுகணையை பார்வையிட்ட கிம் ஜாங் உன்
இதனை தொடர்ந்து சனிக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷெய்கு-வை நேரில் சந்தித்து நாட்டின் அணுசக்தி ஆயுதங்களை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.
அப்போது ரஷ்ய ஜனாதிபதி புடினால் முழுமையான அழிவு ஆயுதம் என அழைக்கப்படும் தடுக்க முடியாத ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
மேலும் ரஷ்யாவின் சமீபத்திய Tu-160, Tu-95 மற்றும் Tu-22M3 விமானங்கள், அணுசக்தி திறன் கொண்ட குண்டுகளை வீசக்கூடிய விமானங்கள், மற்றும் ஹைப்பர்சோனிக் கின்சல் ஏவுகணைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு-உடன் இணைந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |