எந்தவொரு ஆயுத ஒப்பந்தம் இல்லை: உக்ரைன் பகைவர் பட்டியலில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்
உக்ரைனுக்கு எதிரான பகைவர் பட்டியலில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை மைரோட்வொரெட்ஸ் வலைதளம் சேர்த்துள்ளது.
ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 19 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ரஷ்ய பயணம் உலக நாடுகள் மத்தியில், அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுத உதவி வழங்குவது தொடர்பான எந்தவொரு முக்கிய முடிவுகளும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ரஷ்ய பயணத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரு நாட்டு தலைவர்களின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பில் எந்தவொரு ஆயுத ஒப்பந்தங்களும் கையெழுத்து செய்யப்படவில்லை என்று ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யாவும், வடகொரியாவும் மிக அருகாமை நாடுகள், எனவே இரு நாடுகள் தங்களது நட்புறவுகளை வளர்த்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.
எதிரி பட்டியலில் இணைந்த கிம் ஜாங் உன்
இதற்கிடையில் உக்ரைனுக்கு எதிரான பகைவர்கள் பட்டியலில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இணைக்கப்பட்டுள்ளார்.
மைரோட்வொரெட்ஸ்(Myrotvorets) வலைதளம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை உக்ரைனுக்கு எதிரான பகைவர் பட்டியலில் இணைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |