வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தொடர்பில் கசிந்த தகவல்: இளைஞர்களுக்கு வலை
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், தமக்கான பாதுகாவலர்களாக உயரமான நபர்களை தேடுவதாக தகவல் கசிந்துள்ளது. குறிப்பிட்ட இந்த முடிவாவது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அளவில் இருந்து 4செ.மீற்றர் அதிகம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தமக்கான புதிய பாதுகாவலர்களை தேடுவதாக தகவல் கசிந்துள்ளது. எலைட் யுனைட் 974 என அறியப்படும் அந்த சிறப்பு குழுவானது கிம் ஜோங் உன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகின்றது.
தற்போது இந்த குழுவில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் வகையில் ஆட்களை தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 17 வயது நிரம்பிய 167செ.மீற்றர் உயரம் கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கிம் ஜோங் உன் தமக்கு 170செ.மீற்றர் உயரம் இருப்பதாக கூறப்படும் நிலையில், தமது பாதுகாவலர்களுக்கு அதைவிட குறைவான உயரம் இருந்தால் போதும் என கருதுவதாக தென் கொரிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பாதுகாவலர்களாக தெரிவு செய்யப்படுபவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும், விவசாயி அல்லது தொழிலாளர்கள் குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பத்தாரை விட்டு, மிக நீண்ட காலம் பிரிந்திருக்கும் நிலை ஏற்படும் என்பதாலையே, கிராமப்பகுதியில் இருந்து இளைஞர்களை தமது பாதுகாப்புக்கு குழுவில் இணைக்க கிம் திட்டமிடுகிறார்.
மட்டுமின்றி கிராமப்பகுதி இளைஞர்கள் உயிரையும் கொடுத்து தங்கள் தலைவரை பாதுகாப்பார்கள் என்றே கிம் நம்புகிறார். மேலும், சமூக அக்கறை கொண்டவர்கள், கிம் ஜோங் மீது பக்தி கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கசிந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.