வட கொரியாவின் முக்கிய சக்தியாக உருவெடுக்கும் கிம் யோ-ஜாங்! சகோதரியின் அந்தஸ்தை உயர்த்திய கிம் ஜாங் உன்: முக்கிய அறிவிப்பு
வட கொரியாவின் உயர்மட்ட குழு உறுப்பினராக அதிபர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜங்கிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நடத்தும் KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான மாநில விவகார ஆணையத்தின் உறுப்பினராக கிம் யோ ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை நாட்டின் தலைமைத்துவத்தில் கிம் யோ-ஜாங்கின் நிலையை வலுப்படுத்தியுள்ளது, இந்த பதவிதான் கிம் யோ-ஜங்கின் மிக உயர்ந்த பதவி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கிம் ஜாங்-உன், கிம் யோ-ஜாங்கின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளார் என்று தேசிய வியூகத்திற்கான கொரியா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் Shin Beom-chul கூறினார்.
கொரியப் போரை (1950-1953) முறையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தென் கொரிய ஜனாதிபதியின் திட்டத்திற்கு கிம் யோ-ஜங் கலவையான பதிலை வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.