நிம்மதியாக தூங்க வேண்டுமா.. வேண்டாமா? ஜோ பைடனின் அமெரிக்க அரசுக்கு கிம் ஜாங்-உன்னின் சகோதரி பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது கொரியக் கொள்கையை வகுக்கத் தயாராகி வருவதால், வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் செல்வாக்குள்ள சகோதரி, பிரிச்சினையை ஏற்படுத்தி மக்களை கோபப்படுத்தக்கூடாது என அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.
கிம் யோ-ஜாங் அவரது சகோதரர் கிம் ஜாங்-உன்னின் செல்வாக்கு மிகுந்தவராக கருதப்படுகிறார் கிம் யோ-ஜாங் கூறியதாக மேற்கோள் காட்டி உத்தியோகபூர்வ Rodong Sinmun செய்தித்தாளில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலுக்கு அப்பால் இருந்து எங்கள் நிலத்தில் வெடிமருந்து வாசனையை பரப்ப போராடும் அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு நான் ஒரு அறிவுரை வழங்குகிறேன்.
வரவிருக்கும் நான்கு வருடங்களுக்கு நிம்மதியாக தூங்க விரும்பினால், இந்த முயற்சியை முதல் கட்டத்திலே கைவிடுவது நல்லது.
அதேசமயம், அமெரிக்கா மற்றும் தென் கொரியா. கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு கிம் யோ-ஜாங் தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் தென் கொரியா தலைநகர் சியோலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக கிம் யோ-ஜாங் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டு இராணுவப் பயிற்சிகள் தங்கள் நாட்டின் மீதான படையெடுப்பிற்கான தயாரிப்புகள் என்று வட கொரியா விவரிக்கிறது.