சீனாவில் நிகழ்ந்த ஒரு ஆச்சரிய சந்திப்பு... உதவி செய்யட்டுமா என கேட்ட புடின்
சீனாவில், ரஷ்ய ஜனாதிபதி புடின், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜான் உங் ஆகியோர் சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ள விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ள நிலையில், சீனாவில் மற்றொரு ஆச்சரிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சீனாவில் நிகழ்ந்த ஒரு ஆச்சரிய சந்திப்பு
ஆம், எதிரெதிர் துருவங்கள் போல் நடந்துகொள்ளும் வடகொரியா மற்றும் தென்கொரியாவின் இரண்டு முக்கிய பிரதிநிதிகள் சீனாவில் சந்தித்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்ததன் நினைவாக சீனாவில் நடத்தப்படும் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக, ரஷ்ய ஜனாதிபதி புடின், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முதலான தலைவர்கள் சீனா சென்றுள்ளனர்.
தென்கொரியா சார்பில், அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான Woo Won-shik சீனா சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று யாரும் எதிர்பாராத ஒரு விடயம் நிகழ்ந்துள்ளது. கிம் ஜான் உங், தென்கொரிய நாடாளுமன்ற சபாநாயகரான Woo Won-shikஉடன் கைகுலுக்கியுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான மோதலை தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என பலமுறை தென்கொரியா அழைத்தும் அதை நிராகரித்த கிம் ஜான் உங், தற்போது Wooஉடன் கைகுலுக்கியுள்ள விடயம் வியப்பை உருவாக்கியுள்ளது.
இன்னொரு முக்கிய சம்பவமும் சீனாவில் நிகழ்ந்துள்ளது. ஆம், Woo ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்தபோது அவரிடம் புடின், நான் உங்களுக்காக கிம் ஜான் உங்கிடம் ஏதாவது செய்தி சொல்லவேண்டுமா என கேட்டுள்ளார் புடின்.
அதற்கு Woo, கருத்துவேறுபாடுகளை மீறி, கொரிய தீபகற்பத்தில் அமைதியை உருவாக்குவது இப்போது மிகவும் அவசியம் என புடினிடம் கூறியதாக தென்கொரியா தரப்பில் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |