என் நாட்டு பெண்களே, தயவுசெய்து... கண்ணீருடன் கோரிக்கை வைத்த கிம் ஜாங் உன்
தன் நாட்டு பெண்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், பெண்கள் நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் விட்டதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்படி என்ன கோரிக்கை வைத்தார் கிம்?
அதாவது, வடகொரியாவில் குழந்தை பிறப்பு வீதம் கடந்த 10 ஆண்டுகளாகவே வேகமாக குறைந்துவருகிறது. ஆகவே, தயவு செய்து தாய்மார்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையைத்தான் முன்வைத்துள்ளார் கிம்.
Image: Korean State Television
மனித வளம் இல்லாவிட்டால், நாட்டுக்காக உழைப்பதற்கு பணியாளர்கள் கிடைக்கமாட்டார்கள். அதனால் நாட்டில் பொருளாதாரமே பாதிக்கப்படக்கூடும். ஆகவேதான் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார் கிம் என்கின்றன சில ஊடகங்கள்.
Image: Korean State Television
பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கிம் பங்கேற்ற நிலையில், பெண்கள் அதிகம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். சில ஊடகங்கள், கிம் அப்படி கோரிக்கை வைக்கும்போது கண்ணீர் விட்டதாக செய்தி வெளியிட, அந்த செய்தியும் அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |