இணையத்தில் திருடிய பணத்தில் ஏவுகணை பரிசோதனை செய்த கிம் ஜாங் உன்: ஐ.நா. பகிரங்க குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு உலகமே கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்த நிலையிலும், வட கொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது.
அதிபரின் செலவுக்காக மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து பணம் அனுப்பிய விவரம் எல்லாம் உலகத்துக்கே தெரியும்.
அப்படிப்பட்ட ஒரு நாடு, கொரோனாவால் முழு உலகின் பொருளாதராமும் பாதிக்கப்பட்ட நிலையிலும், ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை செய்து வந்திருக்கிறது. அதற்காக 220 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது.
வட கொரியாவுக்கு ஏது இவ்வளவு பணம்?
இந்த கேள்விக்கு பயங்கரமான ஒரு பதிலை சொல்லியிருக்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு.
வட கொரியா, சைபர் ஹேக் மூலம், அதாவது இனையத்தை ஹேக் செய்து, பணம் திருடி தனதுஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை நடத்தியுள்ளது என்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு.
கடந்த ஆண்டு, பலதரப்பட்ட ஏவுகணைகளை தனது இராணுவ அணிவகுப்புகளில் வடகொரியா அணிவகுத்துவரச் செய்ததாகவும், புவியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது ஏற்படும் வெப்பத்தைத் தாங்க வல்ல ஏவுகணைகளை உருவாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நாவின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு இதுவரை வட கொரியா பதிலேதும் அளிக்கவில்லை.


