போருக்கு ஆயுதங்களுடன் காத்திருக்கும் கிம் - சமூக ஊடங்களில் வைரலாகும் மீம்ஸ்
மத்திய கிழக்கில் தீவிர போர் நடைபெற்று வரும் சூழலில், வடகொரியா ஜனாதிபதி கிம்ஜாங் உன் வைத்து இணையவாசி மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர்.
ஈரான் போர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டுள்ளார். மேலும், 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், மத்திய கிழக்கு முழுவதும் போர் நடைபெற்று வரும் சூழலில், உலக பொருளாதாரமே பாரிய இழப்பை சந்தித்து வருகிறது.
கிம் ஜாங் உன் மீம்ஸ்
இந்த சூழலில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போரில் கலந்து கொள்ளவில்லை என்ற ரீதியில் அவரை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர் இணையவாசிகள்.
Kim Jong memes is killing me 🤣🤣🤣 pic.twitter.com/1nnuH6Zyd4
— 𝐌𝐫 𝐊𝐇𝐀𝐍 (@mr_khanpromax) March 4, 2026
ஏவுகணை சோதனைகளுக்கு பெயர் பெற்ற கிம், தங்கள் நாட்டை யாரும் தாக்க மாட்டார்களா?, போருக்கு தங்களை யாரும் அழைக்க மாட்டார்களா என ஏவுகணைகளுடன் காத்திருப்பது போன்ற மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
The soldier: Sir please it's time for lunch!
— Sheriff of Benin (@Di_Lanke) March 5, 2026
Kim jong UN: Did you just say launch?
😂😂😂😂😂 pic.twitter.com/kvmJwMmuHX
I have to get in the war pic.twitter.com/f4EPI9xjes
— Kim Jong un (@kimjongunson) March 5, 2026
அனைத்து பொம்மைகள் இருந்தும், விளையாட்டில் சேர்த்துக்கொள்ளப்படாத குழந்தை கிம் என ஒரு மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
Is it just me that feels a bit sorry for Kim jong-un at the moment? He has waited his entire life for this moment and nobody’s even given him the invite. Poor guy. pic.twitter.com/6ibWzeUQ8S
— Matt Bradley (@matty_brad93) March 4, 2026
வடகொரியா ஏவுகணை சோதனை
கிம்மை வைத்து இணையவாசிகள் மீம் போட்டு மகிழும் அதே நேரத்தில், வடகொரியாவில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு நாசகாரக் கப்பலை ஆய்வு செய்து, அந்தக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார்.

சோ ஹியோன்(Choe Hyon) என்று பெயரிடப்பட்ட இந்தப் போர்க்கப்பல், ஏப்ரல் 2025 இல் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட 5,000 டன் எடையுள்ள நாசகாரக் கப்பலாகும்.

இது வான் எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் மற்றும் நாசகாரக் ஏவுகணைகள் உட்பட பல்வேறு ஆயுத அமைப்புகளை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2 போர் கப்பல்களை உருவாக்க வேண்டும் என கிம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |