கிம் ஜாங் உன் மகளின் விலையுயர்ந்த ஜாக்கெட்: உணவு நெருக்கடிக்கு மத்தியில் விலையை கேட்டு வாய்பிளக்கும் மக்கள்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மகள் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையின் போது விலையுயர்ந்த கிறிஸ்டியன் டியோர் ஜாக்கெட்டை அணிந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விலையுயர்ந்த ஜாக்கெட்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ-ஏ கடந்த வாரம் நடத்தப்பட்ட Hwasong-17 ஏவுகணை சோதனையில் தந்தையுடன் கலந்து கொண்டு ராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.
இந்நிலையில் தென் கொரிய ஒளிபரப்பாளரான டிவி சோசன், கிம் ஜூ-ஏ (Kim Ju-ae) வின் தனித்துவமான ஜாக்கெட் குறித்த செய்திகளை வெளியிட்டது.
AFP
அதில் கிம் ஜூ-ஏ விலையுயர்ந்த கிறிஸ்டியன் டியோர் (Christian Dior jacket) கருப்பு நிற குயில்ட் ஜாக்கெட்டை அணிந்திருந்தார் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த உயர்தர ஃபேஷன் லேபிள் கிறிஸ்டியன் டியோர் உலகில் எங்கும் பிரபலமான பிராண்டாகும். ஃபேஷன் ஹவுஸ் இணையதள தரவுகளின் படி, 10 வயது 12 வயது அளவுகளில் உள்ள ஜாக்கெட் அமெரிக்காவில் $2,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவில் உணவு பஞ்சம்
தொடர்ச்சியான அணுசக்தி திட்டங்களால் உலக நாடுகளின் பொருளாதார தடைகளை வட கொரியா எதிர்கொண்டு வருகிறது.
others
இதனால் வடகொரிய மக்களுக்கான உணவு நிலைமை மோசமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் வடகொரிய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் ஐ.நா சபையின் புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ-ஏ விலையுயர்ந்த ஜாக்கெட் அணிந்து பொதுவெளியில் தோன்றி இருப்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.