ஒரே அகழியில் இரத்தம்..புடினுக்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி அனுப்பிய கிம்
ரஷ்யா ஜனாதிபதி புடினுக்கு அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், தங்களது துருப்புகள் குறித்து கிம் ஜோங் உன் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் படையெடுப்பில்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில், ஆயிரக்கணக்கான துருப்புகளை போரிட வடகொரியா அனுப்பியதாக தென் கொரிய மற்றும் மேற்கத்திய உளவு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வடகொரியா தனது துருப்புகளை அனுப்பியதும், தனது வீரர்கள் போரில் கொல்லப்பட்டதும் ஏப்ரல் மாதத்தில் உறுதியானது.
டிசம்பர் 12ஆம் திகதி கிம் ஜோங் உன் ஆற்றிய உரையில், 120 நாட்கள் பணியின்போது பொறியாளர் பிரிவைச் சேர்ந்த குறைந்தது 9 வீரர்கள் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார். இது அவரது படைப்பிரிவு தாயகம் திரும்பியதை குறிக்கும் வகையில் அமைந்தது.

இந்த நிலையில், ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ஒரு நாள் கழித்து, கிம் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ஒரே அகழியில் இரத்தம், வாழ்வு
KCNA செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 2025ஆம் ஆண்டு இருதரப்பு கூட்டணிக்கு ஒரு உண்மையிலேயே அர்த்தமுள்ள ஆண்டு.
இந்தக் கூட்டணி ஒரே அகழியில் இரத்தம், வாழ்வு மற்றும் மரணத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பலத்தப்பட்டது என்று கிம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் நீண்ட தூர ராக்கெட் அமைப்புகளையும் ரஷ்யாவிற்காக போரிட துருப்புகளோடு அனுப்பியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கு பதிலாக, வடகொரியாவிற்கு நிதி உதவி, இராணுவ தொழில்நுட்பம் மற்றும் உணவு மற்றும் எரிசக்திப் பொருட்களை ரஷ்யா அனுப்புகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |