மேற்கத்திய நாடுகளுடன் புனிதப் போர்: விளாடிமிர் புடின் - கிம் ஜாங்-உன் உறுதி
மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான புனிதப் போரில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கிம் ஜாங் உன் உறுதி அளித்துள்ளார்.
தீமைக்கு எதிராக வெற்றி
ரஷ்ய இராணுவமும் மக்களும் தீமைக்கு எதிராக வெற்றி பெறுவார்கள் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் வட கொரிய தலைவர் புடினிடம் தெரிவித்துள்ளார்.
@reuters
சுமார் இரண்டு மணி நேரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் கிம் ஜோங் உன். சர்வதேச தடைகளுக்கு மத்தியில், இரு நாடுகளும் ஆயுத ஒப்பந்தமும் முன்னெடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
வட கொரியாவின் ஆயுதங்களுக்கு பதிலாக ரஷ்யா உணவு தானியங்களை வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது. இரு தலைவர்களும் முன்னெடுத்த ஆலோசனைகளின் விரிவான தகவல் வெளியாகாத நிலையில், ரஷ்யாவின் விண்வெளி ஆய்வுகளில் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
@epa
மேலும், சோவியத் காலகட்டத்தை சேர்ந்த ஆயுதங்களை வடகொரியா ரஷ்யாவுக்கு அளிக்கும் என்றே நம்பப்படுகிறது. இரு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த ஒருமணி நேரத்தில் வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இரண்டு ஏவுகணைகளை ஏவியது.
மட்டுமின்றி, நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுடன் கிம் ஜோங் உன் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், வடகொரியா ஏவுகணை ஏவியிருப்பது இதுவே முதல் முறை.
@ap
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |