ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி
உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வீர மரணமடைந்த வட கொரிய வீரர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பான வாழ்க்கை அமைத்துத் தரப்படும் என ஜனாதிபதி கிம் ஜோங் உன் உறுதி அளித்துள்ளார்.
தம்மால் காப்பாற்ற முடியாமல்
தங்கள் மகன்கள் மற்றும் கணவர்களின் வீர மரணத்திற்காக துக்கமடைந்தவர்களை கிம் ஜோங் உன் தேற்றவும் பாராட்டவும் செய்தார். உக்ரைனில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினருக்காக கூட்டப்பட்ட சந்திப்பில், வட கொரிய வீரர்களின் உயிரை தம்மால் காப்பாற்ற முடியாமல் போனதில் கிம் ஜோங் உன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் உறுதியான, தேசபக்தியுள்ள மற்றும் நீதியுள்ள குடிமக்களான குடும்பங்கள், தங்கள் உறவினர்களுக்கு அளித்த வலிமை மற்றும் தைரியத்தால்தான் அவர்களின் வீரச் செயல்கள் சாத்தியமானது என்றும் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் ஒரு சிறிய குறிப்பு கூட தமக்கு எழுதவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் அன்பான குழந்தைகள் உட்பட அவர்களின் குடும்பங்களை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என கிம் ஜோங் உன் பதிவு செய்துள்ளார்.
ஆழ்ந்த மரியாதை
மட்டுமின்றி, தியாகிகளின் உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாக்கப்பட்ட நாட்டில், நாடு உங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நிகழ்வில் உணர்ச்சிவசப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கிம் ஆழ்ந்த மரியாதை செலுத்துவதை வட கொரியாவின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
உக்ரைனின் எல்லையை ஒட்டிய ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பலத்த உயிரிழப்புகளைச் சந்தித்த வட கொரிய துருப்புக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட சமீபத்திய நிகழ்வாகும்.
மட்டுமின்றி, உக்ரைனுக்கு எதிராக போரிட புறப்பட்ட வட கொரிய வீரர்கள் தொடர்பான 25 நிமிட ஆவணப்படம் ஒன்றையும் அரசு தொலைக்காட்சி ஒளிப்பரப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |