5000 டன் எடையுள்ள புதிய கப்பலில்..பாய்ந்த ஏவுகணை: மகளுடன் மேற்பார்வையிட்ட கிம் (வீடியோ)
வடகொரியா புதிய கடற்படை கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தியதை, அந்நாட்டு தலைவர் மேற்பார்வையிட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
Choe Hyon
வடகொரியா கடந்த ஆண்டு டு ஏப்ரல் மாதம் தனது கடற்படை சக்தியை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 5000 டன் எடையுள்ள பல்நோக்கு அழிப்பு கப்பலான Choe Hyon-ஐ வெளியிட்டது.
North Korean leader Kim Jong Un oversaw the test launch of strategic cruise missiles from a new 5,000-ton naval destroyer, the country's state media said pic.twitter.com/MxOl4mDNjV
— Reuters (@Reuters) March 11, 2026
அதனைத் தொடர்ந்து, சூன் 2025யில் the Kang Kon என்ற மற்றொரு ஏவுகணை கப்பலையும் அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில், தென் கொரியா-அமெரிக்கா இராணுவப் பயிற்சிகளுக்கு இடையே, 5000 டன் எடையுள்ள Choe Hyon கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.
இந்த சோதனையை வடகொரியத் தலைவரான கிம் ஜாங் உன் (Kim Jong Un) தனது மகளுடன் சேர்ந்து வீடியோ மூலம் கவனித்தார்.
அணுசக்தி போர் தடுப்பு
அவர், "சக்தி வாய்ந்த மற்றும் நம்பகமான அணுசக்தி போர் தடுப்பினை பராமரிப்பதும், விரிவுபடுத்துவதும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்" என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் கிம்மின் மகள் Ju-ae சோதனையை மேற்பார்வையிடுவதைக் காட்டின.
முன்னதாக, "எங்கள் போர் தடுப்பு கூறுகள் இப்போது மிகவும் அதிநவீன செயல்பாட்டு அமைப்பில் தொடர்ந்து திறம்பட மற்றும் துரிதப்படுத்தப்பட்ட முறையில் சேர்க்கப்படுகின்றன. மேலும், நாட்டின் அணுசக்தி படைகள் பன்முக செயல்பாட்டின் கட்டத்திற்கு மாறிவிட்டன" என்று கிம் கூறியதாக KCNA மேற்கோளிட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |