கிம் ஜாங் உன் எங்கே? சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ள புகைப்படம்
Military put into firing positions by Kim Jong Un's sister on border visit, after coma rumours: கிம் ஜாங் உன் கோமாவிலிருப்பதாக வதந்திகள் பரவிவரும் நிலையில், அவரது தங்கை எல்லையில் ராணுவத்தை பார்வையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கோமாவிலிருக்கிறார் என்றும், மூளையில் இரத்தக்கசிவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்றும் பலவிதமான வதந்திகள் பரவிவருகின்றன.
கிம் ஜாங் உன் எங்கே?
இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 11ஆம் திகதிக்குப் பிறகு கிம் ஜாங் உன் வெளியே நடமாடவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் சீன ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடையவரான வான்ஜுன் ஜை (Wanjun Xie) என்பவர், வடகொரிய ஜனாதிபதியாகிய கிம் ஜான் உங் (42) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை கிம்முக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சீன மருத்துவக்கல்லூரி ஒன்றிலிருந்து நிபுணர்கள் குழு ஒன்று வடகொரியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் வான்ஜுன் தெரிவித்துள்ளார்.
மேலும், கிம் கோமாவுக்குள் சென்றுவிட்டதாகவும், அதைத்தொடர்ந்து பீஜிங்குக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனாலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் வான்ஜுன் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஊடகங்கள் எழுதத் துவங்கின.

கிம் ஜான் உன்னுடைய இடத்தில், அவரது தங்கையான கிம் யோ ஜாங் (39) வடகொரிய ஜனாதிபதியாக ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
வெளியான புகைப்படங்கள்
கிம் ஜாங் உன் மரணமடைந்துவிட்டதாக வேகமாக செய்திகள் பரவ, அவர் உயிருடன் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் திங்கட்கிழமை வடகொரிய அரசு சில புகைப்படங்களை வெளியிட்டது.
ஆனால், அவற்றின் உண்மைத்தன்மையும் சரி, வான்ஜுன் வெளியிட்டுள்ள தகவல்களும் சரி, இரண்டுமே நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில், கிம் ஜாங் உன்னின் நிலைமை தொடர்பில் சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு விடயம் நிகழ்ந்துள்ளது.

ஆம், தென்கொரியாவுடனான எல்லையில் படைகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங் சென்றுள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ராணுவத் தளபதியுடன் கிம் யோ ஜாங் வீரர்களின் பணிகளை மேற்பார்வையிட, வழக்கமாக அந்தப் பணியை மேற்பார்வையிடும் கிம் ஜாங் உன்னை அங்கு காணவில்லை.
அதேபோல, தென்கொரியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் கிம் யோ ஜாங்தான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆக, மொத்தத்தில், கிம் ஜாங் உன் எங்கே என்னும் கேள்வி வலுத்துவருகிறது!